Self Reliance

SEVA for Self Reliance

Free Tailoring and Computer Classes

ENGதமிழ்
  • We are conducting tailoring classes and issue certificate after the completion.
  • These benefits deserving women from the poor section of the society.
  • Presently we are conducting at 13 places in all over Tamil Nadu.
  • We are also focusing on educating on the computer.
  • Girl students who cannot afford on the computer course are being benefited and they even get jobs based on the completion of the training.

தையல் மற்றும் கணினி பயிற்சி மையங்கள்

  • சமுதாய நல சேவை திட்டத்தின் முதல் பணி கல்வி. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரின் கல்விதரத்தை உயர்த்த சேவாபாரதி தமிழ்நாடு கல்விதான மையங்களை நடத்தி வருகிறது. குக்கிராமங்கள், மகளிர் மத்தியில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக இலவச தையல் பயிற்சி மையங்களை சேவாபாரதி தமிழ்நாடு நடத்தி வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் சுயமாக சம்பாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். சிலர் ஆடைகள் தயாரிக்கும் தொழில்சாலையில் பணிபுரிகிறார்கள். இது அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்தியிருக்கிறது
  • தற்போது திருவெற்றியூர், வியாசர்பாடி, அயனாவரம், அம்பத்தூர், விருகம்பாக்கம், நத்தம்பாக்கம், முடிச்சூர், பழவேற்காடு, வந்தவாசி, சேலம், மேச்சேரி, தாரமங்களம், ஓசூர், ராசிபுரம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன

Self Help Groups

ENGதமிழ்
  • Women play a vital role in the economic well-being of the family and the society. To fully empower them for such a role, Sevabharathi Tamilnadu sponsors self-help groups for women.
  • These programs make them to come out from the clutches of poverty and make them financially self-supporting.
  • Sevabharathi also places emphasis on breaking the unhealthy barriers in the society such as un touch ability and works towards social integration through the self-help group activities.

சுய உதவிக்குழுக்கள்

  • சமூகத்திலும் குடும்பத்திலும் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்களிடம் மாற்றம் ஏற்படும் போது, அதனுடைய தாக்கம் அந்த குடும்பத்தில் பிரதிபலிக்கும். இந்த அடிப்படையில் தான் சேவாபாரதி தமிழ்நாடு சுய உதவிக்குழுக்களை நடத்தி வருகிறது.
  • வறுமையிலிருந்து மீட்பது, சுயசார்பு நோக்கி குடும்பங்களை கொண்டு செல்வது ஆகியவற்றை மையமாக வைத்து இக் குழுகள் நடைபெற்று வருகின்றன.
  • இக் குழுக்களை வெறும் பண ரீதியாக இயங்காமல் பண்பாட்டு குழுக்களாக மாற்றம் செய்வதில் சேவாபாரதி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது
  • ஆசிரியர் ஆசிரியைகள் கற்பிக்கும் திறமை கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்களுக்கு நம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றின் மீது ஒரு பெருமிதம் ஏற்படுத்திவதில் கவனம் செலுத்தி வருகிறது.
  • அத்துடன் இன்று சமுதாயத்தில் புரையோடிருக்கின்ற ஜாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை ஆகியவை போக்குவதற்கும் சேவாபாரதி இந்த சுயஉதவி குழுக்கள் மூலம் முயற்சித்து வருகிறது.

Vocational Training

ENGதமிழ்
  • Sevabharathi Tamilnadu emphasis on women self empowerment through identifying their skills and strength in various vocational jobs. Training being conducted in making.
    1. PAPER BAG
    2. SOAP
    3. CANDLES
    4. ORNAMENTS AND DECORATIVE ITEMS
    5. WOMEN’S COSMETICS.
  • Towards the above one day camp being conducted in village levels, three days camps being conducted in district levels and 10 days camp being conducted at state level.

தொழிற் பயிற்சி

  • சேவாபாரதி தமிழ்நாடு மகளிர் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு தொழிற்பயிற்சி நடத்தி வருகிறது.
    1) காகித பை
    2) சோப் தயாரித்தல்
    3) மெழுகுவர்த்தி தயாரித்தல்
    4) அலங்கார பொருட்கள் தயாரித்தல்
    5) மணப் பெண் அலங்காரம்
  • இதற்காக உள்ளுரில் ஒரு நாள் முகாம், மாவட்ட அளவில் மூன்று நாட்கள் முகாம், மாநில அளவில் 10 நாட்கள் முகாம் நடைபெற்று வருகின்றன.

Contribute to Seva

You can Make a Difference Today!

Every Little Drop Helps!